சென்னை செம்மஞ்சேரி அம்ரோசியா அப்பார்ட்மெண்ட் அரங்கில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிளை துவக்க விழா நடைபெற்றது.நவசமாஜ் மாநிலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. சூரிய நாராயணன், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சவிதானந்தநாத் சுவாமிஜி, ஹெரிடேஜ் ஹாஸ்பிடல் நிறுவனர் டாக்டர் ராமலிங்கம், தொழில் அதிபர் திரு.பன்வார், டாக்டர் தமிழரசன், ஓய்வு பெற்ற நீதிபதி திரு .ஜீவானந்தம் , அமைப்பு செயலாளர் திரு பாலச்சந்தர், டாக்டர் பாலமுரளி, மாநில இணைச் செயலாளர் அரிமா .மு. மதிவாணன், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாவட்ட தலைவர் திரு.முருகன் அனைவரையும் வரவேற்றார்.
அப்போது நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் உலகறிய செய்ய navsamajindia.org என்ற web portal ஐ உருவாக்கிய பொறியாளர் திரு. அருண்குமாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவில் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர், செயலாளர் , பொருளாலர், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்பதவியேற்றுக் கொண்டனர் .
exellent our team work. thank you to all our navasamaj team