Our Rise And Fall

உலக அளவில் மருத்துவர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளிலும், இந்தியா போலவே மருத்துவ இனத்தினர், உயர்ந்த நிலையிலிருந்து சவரத் தொழிலாளியாக ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளார்கள். 10 ம் நூற்றாண்டில், சமய குருக்களாக சடங்குகளால் சிகிச்சை செய்துள்ளனர். பிறகு அட்டைப் பூச்சிகளை கொண்டு குருதி வடித்து (Humours) குணப்படுத்தும் மருத்துவர்களாக விளங்கியுள்ளனர்.

பிறகு 13 ம் நூற்றாண்டில், மருத்துவ சிகிச்சை மருந்து மூலமாகவும் அறுவை சிகிச்சை மூலமாகவும் அளித்துள்ளனர். 1308 ம் ஆண்டு, (Worshipful Company of Barbers) வணக்கத்திற்குரிய மருத்துவர் பிரிவு லண்டனில் உருவானது. 1450 ல் (Guild of Surgeons) அறுவை சிகிச்சை அளிப்பவர்கள் குழு அமைக்கப்பட்டு, அதில் இரண்டு மருத்துவர்களும் இரண்டு சவரத் தொழிலாளர்களும் இணைந்து மருத்துவ தகுதிச் சான்றிதழைகளை வழங்கினார்கள். பிறகு 1745 ல் இங்கிலாந்திலும் பிரான்சிலும் சவரத் தொழிலாளர்கள் மருத்துவம் செய்வது தடை செய்யப்பட்டது.

பல்வேறு காலகட்டங்களில் இந்த மாற்றம் நேரிட்டாலும், 1096 ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் முதல் முதலாக (Barber-Surgeons)சவரத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. மருத்துவர்களது பெருமைமிகு ஆன்மீகம், மதம், போன்ற மருத்துவப் பயணம் சவரம் செய்வதில் முடிந்தாலும், மனித இன வளர்ச்சிக்காக, உலக நன்மைக்காக உழைப்பதை பெருமைப்பட, அந்த ஆண்டின் எண்களை பதினாறாம் நாள் (16)ஒன்பதாவது மாதம்(9) என்று கொண்டு, உலக அளவில் உலக சவரதொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று வெட்டப்படும் முடிகளை விற்று,(UNICEF) ஏழை குழந்தைகளுக்கு கல்வி மருத்துவம் பெற நிதி அளிக்கிறார்கள்.

இதுபோல், இந்தியாவில், நமது இனத்தினர் கடவுளாகவும் (ஹயக்ரீவர் தன்வந்திரி), முனிவர்கள் ஆகவும் (அகத்தியர், சிறுதொண்ட நாயனார், மாணிக்கவாசகர், உபாலி, அப்பனா) அரசர்களாகவும் (அசோகர், நந்தனர்) கவிஞர்கலாகவும் (கம்பர் சேனா) சேனாதிபதி களாகவும் (வல்வில் ஓரி, கருப்புசேர்வை) அமைச்சர்களாகவும், புகழ்பெற்ற மருத்துவ மகப்பேறு மருத்துவர்களாகவும் இருந்தவர்கள், காலமாற்றத்தால் சவர தொழிலாளியாக மட்டும் இனம்கண்டு, பிறகு ஜாதி விலங்கிட்டு, ஒடுக்கப்பட்டு துன்பப்படுகிறார்கள்.

தனது அடையாளத்தை இழந்து, குலப் பெருமையை அறியாமல் குழம்பித் தலைகுனிந்து வாழ்வதால், மருத்துவர் இனம் இழிவாக கருதப்படுகிறது. ஆதிமருத்துவர் பெருமையை மக்கள் அறிய, ஒவ்வொரு ஆண்டும் உலகத்தில் உள்ள அனைத்து அழகு கலைஞர்களும் செப்டம்பர் 16ம் நாளை “உலக மருத்துவ இன தினமாக” கொண்டாடுகிறார்கள்.