உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று 10.09.2024 ஆம் தேதி வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் வேலூர் மாவட்ட அமைப்பு இனிதே துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. அன்பானந்தம் அவர்கள் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர்கள் திரு. பாலசந்தர் மற்றும் திரு.மதிவாணன்,

மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. திரு.மோகனகுமரன் மற்றும் வழக்கறிஞர் திரு.இராஜபாண்டியன்,
மாநில பொருளாளர் திரு. சேகர் பாபு,
திருவண்ணாமலை மாவட்ட தலைவர் திரு. ஆறுமுகம்,
விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு.தனபால், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் திரு.பாலசுப்ரமணியன்,
ஈரோடு மாவட்ட தலைவர் திரு.அன்பழகன், திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.கதிரவன்
மற்றும் தமிழ்நாடு முடித்திருத்தம் தொழிலாளர் நலம் மற்றும் மருத்துவ நல சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நூற்றிற்க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு நமது சமுதாய மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் வேலூர் மாவட்ட தலைவராக Vetrivel Timbers திரு. சண்முகம்,
மாவட்ட செயலாளராக Dhanam catering service திரு. முரளி தாஸ்,
மாவட்ட பொருளாளராக Eicher dealer திரு. அருணை ஜெயசீலன்,
மாவட்ட இணைச் செயலாளர்களாக Drawing Teacher திரு.குமரன்
மற்றும்
Book store, Chit funds & Real Estate திரு. ராஜி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக Jewellers திரு.இளங்கோவன்,
Eagle Beauty parlour திரு. ஹரி நரசிம்மன்
Ex. Army & LIC agent திரு. சங்கரன்
Real Estate & Yazhini fresh market திரு. தினேஷ்,
First Choice events திரு. ஜெய்சங்கர்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனவும், மேற்படி துவக்க விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்கள்💐💐💐